துறையூரில் புதிய வகுப்பறை கட்டிடம்; திறந்து வைத்த முதல்வர்
துறையூர் அருகே உள்ள நாகநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறை கட்டிடத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.