முட்டை விலை கிடுகிடுவென உயர்வு
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 54 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை ரூ.5.90ஆக உயர்ந்தது இதுவே முதல்முறை. முட்டை நுகர்வு, விற்பனை அதிகரித்துள்ளதால், கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிசம்பர் 04) முதல் அமலுக்கு வரும்.