திருச்சி உணவு பாதுகாப்புதுறை சிவில் வழக்குகள் சிறப்புமுகாம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மதியம் 5 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறையில் கடந்த மூன்று வருடங்களாக 460 சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த வழக்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுத்தலின் பேரில் சிவில் வழக்கினை முடிப்பதற்கு சிறப்பு முகாம் போடப்பட்டு நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 900 நபர்கள் கலந்து கொண்டனர் இதில் 460 மொத்த வழக்குகளில் 257 வழக்குகள் முடிவற்றது மீதம் 102 வழக்குகள் பாதி அளவு முடிக்கப்பட்டுள்ளது மொத்தம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதில் உடனடியாக அதே இடத்தில் 5 லட்சத்து 49 ஆயிரம் அபராத தொகை அரசு கருவூலக்கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் இது குறித்து கூறுகையில் இதுபோன்ற உணவு கலப்படத்தில் ஈடுபடும் உணவு வணிகர்களும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.