முசிறி தாலுக்கா மேட்டுப்பாளையம் கரிகாலி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் வயது என்பது. இவர் தனது கணவர் கணேசனுடன் நேற்று முன்தினம் திருவானைக்காவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று அங்கிருந்து புறப்பட்டு துறையூர் வழியாக சொந்த ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் இறங்கி பவித்திரம் பஸ்ஸில் ஏறினார். அப்போது செல்லம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த ஐந்து பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றார் இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.