திதுறையூர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மழை வெள்ளம் ஏற்படும் போது முதியோர் மற்றும் குழந்தைகளை எப்படி காப்பாற்றி அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினார்கள்.
மேலும் பூகம்பம் சுனாமி ஆகிய பேரிடர் காலங்களிலும் இடி மின்னல் ஏற்படும்போது தற்காத்து கொள்வது குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய கருவிகள் தீயணைப்பு நிலைய வளாகம் ஆகியவற்றை பள்ளி குழந்தைகள் பார்வையிட்டனர் துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வுகளை செய்து காட்டினார்கள்.