துறையூர் பச்சமலை பகுதியில் நேற்று 40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துறையூர் பகுதியில் நேற்று காலை முதலே வானம் வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விட்டு விட்டு மழை பொழிந்து வந்தது. இந்த நிலையில் துறையூர் பச்சமலை தென்புறநாடு பகுதியில் 40 மில்லி மீட்டரும் துறையூர் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.