துறையூரில் குடும்பதகராறில் இளம் பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் துறையூர் டவுனில் சந்தை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் சுமை தூக்கும் தொழிலாளி இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்பத்தகராறு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக சித்ரா வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபாகரன் சித்ராவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்ரா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.