மணச்சநல்லூர் பாலியல் வழக்கு திமுக நிர்வாகிக்கு வலை

72பார்த்தது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் கிராமத்தை சேர்ந்த வீரபத்திரனின் மகன் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், தற்போதைய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் என கூறப்படும் ஆனந்தன் என்பவர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு சிறுமிகளை மறைவான ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக சைகை காட்டியும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியில் சொன்னால் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அந்த இரண்டு சிறுமிகளும் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர்கள் 1098 குழந்தைகள் மையத்திற்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் மைய மேற்பார்வையாளர் கலாவதி இரண்டு சிறுமிகளின் வீட்டிற்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை செய்த போது உண்மை என தெரிய வரவே ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தற்போதைய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் என கூறப்படும் ஆனந்தன் மீது புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது போக்ஷ வழக்கு பதிந்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி