திருச்சி மாவட்டம் முசிறி எம் ஐ டி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை 4வது நாளாக தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
முசிறி அருகே இயங்கி வரும்
எம் ஐ டி கல்லூரி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமானது. இளங்கோவன் அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக பதவியில் உள்ளார். முசிறி அருகே அமைந்துள்ள
எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் மற்றும் எம்ஐடி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களிலும் வருமான வரி துறையினரின்
சோதனை நேற்று இரவும் விடிய விடிய நடைபெற்ற நிலையில் 4வது நாளாக தற்போது வரை சோதனை தொடர்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது