துறையூர் அருகே உள்ள பளவாடியைச் சேர்ந்தவர் முருகையா இவர் மது போதையில் கடந்த முப்பதாம் தேதி அன்று வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துள்ளார் இதனால் அவருடைய குழந்தை பயந்து அழுதுள்ளது இதை மனைவி சசிகலா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முருகையா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த முருகையா நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இச்சம்பவம் குறித்து புலிவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.