திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர்கள் ஜீவானந்தம், ஜனார்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களில் தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ. 5200 லிருந்து ரூ. 20,000 ஆக மாற்ற வேண்டும், தர ஊதியம் ரூ. 1900 உடனே வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்கக் காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி முழக்கமிட்டனர். திரளான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.