துறையூர் அடுத்துள்ள து. ரெங்கநாதபுரத்தில் ஊராட்சியில் திமுக வடக்கு கிளை சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பிறந்த நாள் விழா நேற்று சனிகிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு மூன்று கிலோ கேக் வெட்டி, 300 மக்களுக்கு உணவு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் துரை சூர்யா, துரை லாவண்யா , மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், ரெங்கநாதபுரம் ஊராட்சி தலைவர் சரிதா பாலசுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் ஜே ரவி, நடராஜன், கே ரவி, ரமேஷ், டிராக்டர் கோவிந்தன், மணி , கண்ணையன் சிவக்குமார், பட்டறை விஜயகுமார், தீபிகா பிரபாகரன், ஜே சி சி பி பிரகாஷ், டைலர் ரங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருச்சி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் துறையூர் பாஸ்கரன் செய்திருந்தார்.