துறையூர் நகராட்சிக்குட்பட்ட மதுராபுரி புது தெரு பகுதியைச் சேர்ந்த வஹிதா இவருடைய கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் இவர் தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமயபுரம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார் இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தில் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வகிதா வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்க நகை 20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது அதேபோல் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பாத்திமா என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட முயற்சி செய்ததில் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் பொருட்களை கலைத்துப் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.