பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, அதன் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கி, நலிந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அதிமுக முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

வீடியோஸ்


பெரம்பலூர்