பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூர்: 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்-ஜாக்டோ ஜியோ

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற நிலையில். அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜட்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின், பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான ரெங்கசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதனை தொடர்ந்து கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்