பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூர்: ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பேற்பு

பெரம்பலூர்: ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வராக ராமராஜ் பொறுப்பேற்றார். பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடலூரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மதுரை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றிய முனைவர் ராமராஜ் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்