நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் (வீடியோ)

13210பார்த்தது
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடக்கிறது. இந்த நிகழ்வில் திரையுலகினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மயில்சாமியின் மறைவையொட்டி, நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சித்தார்த், ராதாரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.