'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு

1477பார்த்தது
'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு
விஜய் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கிய ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு ஒரு புதிய தகவலை அளித்துள்ளது. இம்மாதம் 22ஆம் தேதி அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக வெளியான அஜித்தின் ‘துணிவு’ படம் ஏற்கனவே நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.