சாகும் முன் மயில்சாமி டப்பிங் பேசிய வீடியோ!

26155பார்த்தது
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமி நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர்கள் விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார். மயில்சாமியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், அவர் நேற்று திரைப்படம் ஒன்றிற்கு டப்பிங் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.