பிரபல தெலுங்கு காமெடி நடிகை கீதா சிங்கின் மகன் சாலை விபத்தில் காலமானார். தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கீதா சிங், திருமணம் செய்துகொள்ளாமல் மகன் ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவரது மகன் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து பதிவிட்ட கீதா சிங், பைக்கில் செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள். வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.