மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் (வீடியோ)

சென்னையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோயம்பேடு மேம்பாலத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் ரோஷன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பைக்கை நிறுத்திய ரோஷன் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி மனைவியை தாக்கினார். இதனால் அந்த பெண் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அருகில் இருந்தவர்களை அவர் உதவிக்கு அழைத்த வீடியோ வைரலான நிலையில் ரோஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி