தேர்வில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு மார்க் போட்ட ஆசிரியர் நீக்கம்

77பார்த்தது
தேர்வில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு மார்க் போட்ட ஆசிரியர் நீக்கம்
உ.பி.யின் புர்வாஞ்சல் பல்கலைக்கழக தேர்வெழுதிய மாணவர்களில் 4 பேர் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்றும் சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் விடைத்தாள் முழுவதும் எழுதிவைத்தனர். இந்த நிலையில், விடைத்தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் இருவர், ஜெய்ஸ்ரீராம் என்று எழுதிய நான்கு மாணவர்களுக்கும் 50 சதவீத மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். இது சர்ச்சையான நிலையில் விடைத்தாளைத் திருத்திய பேராசிரியர்கள் இருவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி