முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்

549பார்த்தது
முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பிரியமான தோழி'. 2022ல் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 500 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என்ற தகவல் அதன் ரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது. இந்த சீரியலில், சாண்ட்ரா பாபு கதாநாயகியாக நடிக்க, விக்கி ரோஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதைக்களத்தில் பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்கு பதிலாக எந்த சீரியல் வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி