இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

72பார்த்தது
இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தான் தேர்வ்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். அதில், ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி