கேரளாவில் பரவும் புது வைரஸால் உயிரிழப்பு ஏற்படுமா?

வெஸ்ட் நைல் என்கிற வைரஸ் தொற்று நோய் தற்போது கேரளாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஆரம்பகட்டத்திலேயே பரிசோதித்து அதற்கான சிகிச்சை அளித்து விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் தாமதமாக கண்டறிந்து வைரஸ் பிற உறுப்புகளுக்கும் பரவி விட்டால் வலிப்பு, சுயநினைவற்ற நிலை, கோமா ஆகியவை ஏற்பட்டு மரணம் கூட நிகழ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் படி இந்த வைரஸ், நரம்பியல் நோய்களை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி