மூளைக்காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு சிறந்த வழி தடுப்பூசி தான். பாக்டீரியாவால் உண்டாகும் 'மெனிங்கோகோகல்' மூளைக் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்க்கு தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. இந்த தடுப்பூசிகள் நான்கு முக்கிய மூளைக்காய்ச்சல் வகையிலிருந்தும் பாதுகாக்க உதவுகின்றன. குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் உயிருக்கு ஆபத்து தரும், மூளைக்காய்ச்சலில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.