தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காய் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது. தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருக்கும் எனவும் அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளரும் என்கின்றனர்.