உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் இதயத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டென்ட் கருவி என்பது ஒரு சிறிய வகை கருவியாகும். இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் அடைப்புகள் இதயத்தை பாதிக்காமல் இருக்க, அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இந்த ஸ்டென்ட்கள் வைக்கப்படும். இதன் மூலம் குழாயை விரித்து இரத்த ஓட்டத்தையும் அந்த குழாயின் செயல்பாட்டையும் சீராக்கும்.