இன்று (மே 15) சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படும் நிலையில் உலகின் பணக்கார குடும்பம் குறித்து காண்போம். அபுதாபியின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப் படைகளின் உச்ச தளபதியுமான முகமது பின் சயீது அல் நகியானின் குடும்பம் தான் உலகிலேயே பணக்கார குடும்பம். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு $305 பில்லியன் ஆகும். 2019 ஆம் ஆண்டில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை சயீத் மிகவும் சக்திவாய்ந்த அரபு ஆட்சியாளர் என்று புகழாரம் சூட்டியது.