சென்ட்ரல் - விமான நிலைய மெட்ரோ மீண்டும் இயக்கம்

80பார்த்தது
சென்ட்ரல் - விமான நிலைய மெட்ரோ மீண்டும் இயக்கம்
சென்னை மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையில் இன்று (மே 15) திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான நீல வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், விமான நிலையத்திற்கு செல்ல ஆலந்தூர் மெட்ரோ சென்று அங்கிருந்து பச்சை வழித் தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கோளாறு சீர் செய்யப்பட்டு சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.