மஞ்சள் காய்ச்சலை எவ்வாறு கண்டறிவது?

84பார்த்தது
மஞ்சள் காய்ச்சலை எவ்வாறு கண்டறிவது?
பலருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து மஞ்சள் காய்ச்சலை வேறுபடுத்தி கண்டறிய வேண்டும். மஞ்சள் காமாலை பல காரணங்களால் ஏற்படலாம். மலேரியா, எலி காய்ச்சல், ஹெப்படைடிஸ் பி போன்ற வைரஸ்களால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். ஆனால் கல்லீரல் பாதிப்புடன் இரைப்பை, குடல் பகுதிகளில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி எடுத்தல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், மலம் கறுத்து போதல் ஆகிய பாதிப்புகள் இருந்தால் இது மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். எனவே இதற்கான பரிசோதனைகளை செய்து மருத்துவரை உடனடியாக அணுகுதல் அவசியம்.

தொடர்புடைய செய்தி