மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

16143பார்த்தது
மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
மஞ்சள் காய்ச்சல் என்பது டெங்கு, சிக்கன்குனியா போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஎஸ்’ வகை கொசுக்களில், ‘ஏடிஎஸ் எகிப்டி’ என்னும் ஒரு வகை கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மஞ்சள் காய்ச்சல் வைரஸ் உடலுக்குள் நுழைந்த 3-6 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். வழக்கமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி இருக்கலாம். மூட்டு, தசை வலி ஏற்படலாம். சிலருக்குக் கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படலாம். உடலிலும், குடலிலும் ரத்தக் கசிவுகள் ஏற்படலாம். இரைப்பை, குடல், ரத்தக் கசிவுகளால் ரத்த வாந்தி, மலம் கறுத்துப்போதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி