பேருந்துக்காக காத்திருந்த பெண் கொலை

12730பார்த்தது
பேருந்துக்காக காத்திருந்த பெண் கொலை
லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே என்ற பெண், தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே 9ஆம் தேதி, எட்க்வேர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, ​​ஜலால் டெபெல்லா (22) என்பவர் அனிதாவின் மார்பிலும் கழுத்திலும் கத்தியால் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில் அவர் மீது நேற்று முன்தினம் (மே 14) கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.