வாரணாசியில் மோடியை எதிர்த்து காமெடியன் போட்டி

79பார்த்தது
வாரணாசியில் மோடியை எதிர்த்து காமெடியன் போட்டி
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அந்த வகையில், உத்திரப் பிரதேசத்திலும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிராக நகைச்சுவை கலைஞர் ஷ்யாம் ரங்கீலா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி