டிராக்டர் ஓட்டும் 3ஆம் வகுப்பு சிறுவன்: வீடியோ வைரல்

78பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிலாம்பாக்கம் கிராமத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் டிராக்டர் ஓட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் உட்பட எந்தவொரு போக்குவரத்து வாகனங்களையும் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் சிறுவர்களே டிராக்டர்களை ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் டிராக்டரை ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவல்துறை சிறுவனின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.