வயது ஒரு தடையல்ல.. 102 வயது தாத்தாவின் துணிச்சல் (வீடியோ)

78பார்த்தது
காஷ்மீரின் ரியாசி பகுதியைச் சேர்ந்த 102 வயதான ஹாஜி கரம் தின் என்ற முதியவர் வயதானாலும் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைவரும் விளையாட வேண்டும் என அவர் அறிவுரை வழங்குகிறார். உள்ளூர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த முதியவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். காலில் பட்டைகள் மற்றும் கைகளில் கையுறைகளுடன், கிரிக்கெட் பேட்டுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி