கார் விபத்தில் 4 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்

61பார்த்தது
கார் விபத்தில் 4 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சிலாவட்டம் அருகே இன்று (மே 15) அதிகாலை லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, “கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.