போக்சோ குற்றவாளிகளின் விடுதலை அதிகரிப்பு - அன்புமணி

58பார்த்தது
போக்சோ குற்றவாளிகளின் விடுதலை அதிகரிப்பு - அன்புமணி
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 2012ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், போக்சோ கொண்டுவந்த நோக்கத்திற்கு எதிரான திசையில் வழக்குகள் செல்வது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 15) வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், “போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிகள் அதிகம் விடுதலை செய்யப்படுகின்றனர். இது குறித்து நடவடிக்கை தேவை; குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி