திருச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பழூர். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மூலவராக விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர். வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு நவக்கிரகங்கள் தத்தம் மனைவியரோடு அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்களுக்கு குழந்தைப் பேறு, திருமணத் தடை, நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
நன்றி: Aalayam Selveer