மார்ச்.23-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.