குஜராத்: ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் 6 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 50 பேரை பத்திரமாக மீட்ட நிலையில், துரதிஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.