சிலர் சமூக வலைதளங்களைப் பார்த்து சன் ஸ்கிரீனை பயன்படுத்துகின்றனர். ஆனால் தினசரி சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதால் உடம்பில் வைட்டமின் டி குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சூரியனிலிருந்து வரும் UVB கதிர்களை, நம் தோல் உறிஞ்சும் பொழுது வைட்டமின் டி உற்பத்தியாகிறது. UVB கதிர்கள் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய உதவுகின்றன. ஆனால் சன் ஸ்கிரீன்கள் UVB கதிர்களையும் தடுப்பதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாகாமலேயே போய்விடும்.