மெலனின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தோலில் வெண்புள்ளிகள் தோன்றுகிறது. இதை தவிர்க்க கார்போக அரிசி பசையை அந்த இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் இருக்க வேண்டும். கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து காலை இரவு சாப்பிட்டு வரலாம். கரிசாலை சூரணம், இருநெல்லி கற்பம், அயபிருங்க ராஜ கற்பம், பலகரை பற்பம் ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும். இவற்றை எடுப்பதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.