பாசுமதிக்கு மாற்றாக பூசா சுகந்த் 5 ரக நெல்லை காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 120 நாளில் இந்த நெல்லானது மகசூலுக்கு வரும். பாசுமதி ரக நெல்லைக் காட்டிலும் நீளம் குறைவாக இருக்கும் போதிலும் பாசுமதி போலவே உருவ ஒற்றுமை இருக்கும். டெல்டா மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைக்கு மேல் மகசூல் கிடைக்கிறது. நம்மூர் மணல் கலந்த களிமண்ணில் அதிக மகசூல் எடுக்க முடிவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.