ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜார்க்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்டரான ராபின் மின்ஸை ரூ.65 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.3.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்ததால் 2024 தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் ஏலம் போன முதல் பழங்குடியின வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.