தெலங்கானா மாநிலம் வாரங்கல் எம்ஜிஎம் சதுக்கத்தில், இளைஞர் ஒருவர் தான் உயிருக்குயிராக காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதால் மனமுடைந்து சுவற்றில் முட்டி தன் மண்டையை உடைத்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேண்டாம் வேண்டாம் என அருகில் இருந்த நபர்கள் கூறியும் கேட்காத அவராய், அருகில் இருந்த போக்குவரத்து காவலர், அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார்.