சவுதி அரேபியாவில் இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தாலும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஆர்.சி.பி அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை அந்த அணி ரூ. 5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.