ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன்-ஐ சென்னை அணி ரூ. 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. சாம் கரன் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் ஏலத்துக்கு வந்த நிலையில், அவரை எடுக்க சிஎஸ்கே விருப்பம் தெரிவித்தது. அப்போது லக்னோ அணி சிறிது போட்டியளித்துவிட்டு பின்வாங்கியது. இதையடுத்து அவர் சென்னை அணி வசமானார். 2020, 2021 சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சாம் கரன் தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார்.