சீமானுக்கு பதில் தவாக வேல்முருகன்.. நிர்வாகிகள் அதிரடி

59பார்த்தது
சீமானுக்கு பதில் தவாக வேல்முருகன்.. நிர்வாகிகள் அதிரடி
நாதகவில் இருந்து பிரிந்த தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் வரும் நவம்பர் 27-ம் தேதி திருச்சியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு மாற்றாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான டி.வேல்முருகனை முன்னிறுத்தவும் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது. நாதக முன்னாள் நிர்வாகிகள் தங்கள் பலத்தை காட்டவும் நாதகவின் இன்னும் பல நிர்வாகிகளையும் இளைஞர்களையும் ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி