சத்தீஸ்கரை சேர்ந்த விலங்கு நல ஆர்வலரான அஜிதா பாண்டே ஆபத்தான உயிரினங்களை பிடிப்பதில் வல்லவராவார். அண்மையில் ராட்சத பல்லி ஒரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்தது. இது குறித்து அஜிதாவுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து அங்கு வந்த அவர் ஒரு கம்பியை பயன்படுத்தி தண்ணீர் தொட்டியின் ஓரத்திற்கு அந்த பல்லியை இழுத்தார். அந்த பல்லி 2 முறை அஜிதாவை கடிக்க முயன்ற போதிலும் அதை அவர் லாவகமாக பிடித்தார்.